Tuesday, 1 January 2019

கிருபையாய் தேவன் கொடுத்த புதிய ஆண்டு 2019

இயேசுவின் நற்செய்தி ஊழியங்கள் சபையின் சார்பில் உங்கள் அனைவரையும் 2019 இப்புதிய ஆண்டில் வாழ்த்துகிறோம். தேவன் உங்கள் அனைவரையும் செழுமையும் பசுமையும் நிறைந்த வாழ்வுக்கும் இவ்வருடம் நடத்திச்செல்வாராக.
இவ்வருடம் எமது சபையின் வாக்குத்தத்தமாக தேவன் 

“அந்நாளிலே விழுந்துபோன தாவீதின் கூடாரத்தை நான் திரும்ப எடுப்பித்து, அதின் திறப்புகளை அடைத்து, அதில் பழுதாய்ப்போனதைச் சீர்ப்படுத்தி, பூர்வநாட்களில் இருந்ததுபோல அதை ஸ்தாபிப்பேன் என்று இதைச் செய்கிற கர்த்தர் சொல்லுகிறார்.” ஆமோஸ் 9:12
என்ற வாக்குத்தத்தத்தை அருளியிருக்கிறார். அதற்காக தேவனுக்கு நன்றி செலுத்துகிறோம்.



இந்நாளில்  இயேசுவின் நற்செய்தி ஊழியங்கள் -மன்னார் சபைக்கு அருமையான ஊழியக்காரனான போதகர் நா. பிரபாகரன் அவர்களை சபையின் தலைமை நிர்வாகத்தால் சபையின் போதகராக நியமிக்கப்பட்டுள்ளார் என்பதை மகிழ்வோடு அறியத்தருகிறோம்.


No comments:

Post a Comment