Wednesday, 26 December 2018

கிறீஸ்துவின் அன்பை பகிர்வோம்

இவ்வுலகை மீட்க தாமே மனிதனாக பூவுலகில் பிறந்த இயேசுக்கிறிஸ்துவின் அன்பை பகிர்ந்துகொள்ளும் விதமான ‘இயேசுவின் நற்செய்தி ஊழியங்கள்’ சபை மன்னாரில் வறுமை நிலையிலிருக்கும் பத்து குடும்பங்களுக்கு அருமையான போதகர் திரு. பூமிபாலன் அவர்கள் தலைமையில் 24/12/2018 அன்று உணவுப்பொதிகளை வழங்கியது.

எமது வளர்ந்து வரும் சிறிய சபையினால் செய்யப்பட்ட சிறு உதவி, கர்த்தருக்கு முன்பாக பெரிதாக எண்ணப்படும் என்று விசுவசிக்கிறோம். எல்லா கனமும் மகிமையும் தேவனுக்கே உண்டாகட்டும்
எமது ஊழியம் இன்னும் பெருக எங்களை உங்கள் ஜெபங்களில் தாங்கிக்கொள்ளுங்கள்.


Thursday, 30 August 2018

விடுமுறைநாள் வேதாகம கல்வி (VBS) 2018

'இயேசுவின் நற்செய்தி ஊழியங்கள்' சபையின் புதிய பரிணாமமாக இவ்வருடம் ஆகஸ்ட் 27, 28,29 ம் திகதிகளில் விடுமுறை நாள் சிறுவர் வேதாகமக் கல்வி  மிகச் சிறப்பாக நடைபெற கிருபை செய்த தேவனுக்கு நன்றி!

இந்நிகழ்வை உறசாகமாக ஒழுங்கு செய்து சிறப்பாக நடத்தி முடித்த சபை உறவுகளுக்கும் எமது மனமார்ந்த நன்றியையும் வாழ்த்துக்களையும் தெரிவிக்கிறோம். 

ஏற்ற காலத்தில் உயர்த்தும் தேவன் இயேசுவின் நற்செய்தி ஊழியங்கள்' சபையையும் உயர்த்த, இச்சபை மூலம் தேவ நாமம் மகிமைப்படவும், அதிக ஆத்துமா அறுவடை செய்யவும் , அன்பர்கள் அனைவரையும் தங்கள் ஜெபத்தில் எங்களை தாங்கும்படி வேண்டிநிற்கிறோம். 






















-நன்றிகள்-

தலைமை நிர்வாகி 
Bro. றொபின்சன் இம்மானுவேல்