“எவர்கள் தேவனுடைய ஆவியினாலே நடத்தப்படுகிறார்களோ,
அவர்கள் தேவனுடைய புத்திரராய் இருக்கிறார்கள்” ரோமர் 8:14
ஜெபம்:
இன்றைய செய்தி
நாம் தேவனுடைய புத்திரர்கள் என்று சொல்கிறது...
யேசுவை
ஏற்றுக்கொண்டு அவர் வழியில் நடக்கும் நாம் அவருடைய ஆவியினாலே நடத்தப்படுகிறவர்களாக
இருக்கிறோம். எனவே நாம் தேவனுடைய புத்திரர்களாகிறோம்.
அது
மட்டுமன்றி தொடர்ந்து வரும் வசனங்கள் நாம் அவருடைய வாரிசுக்கள் (சுதந்திரர்) ஆகிறோம்
என்கின்றன. இந்த வார்த்தையை விசுவாசித்து அறிக்கையிடுவோமானால், அவருடைய ஆவியினாலே நடத்தப்படுகிற
ஒவ்வொருவராலும் யேசுவைப்போல் செயற்பட முடியும்.
நோய்களைக்
குணப்படுத்த முடியும், அற்புதங்களைச் செய்ய முடியும்; பேய்கள் நம்மைக் கண்டு நடுங்கும்,
அவற்றை ஓட ஓட விரட்டுபவர்களாக நாம் இருப்போம்.. ஏனென்றால் நாம் யேசுவுக்கு உடன் சுதந்திரர்
ஆகிறோம்....சக உரிமையாளர் ஆகிறோம். இந்த உரிமை யாராலும் எந்தக் காலத்திலும் அழிக்க
முடியாது. இதற்கு ஆவியானவர் நம்முடைய ஆவியுடனே சாட்சி கொடுக்கிறார். எங்கள் தந்தை இவ்வுலகில்
இருக்கும் எல்லாவற்றிலும் பெரியவர், பெரும் ஐஸ்வரியவான், பெரும் பலசாலி, மாபெரும் வல்லமையுடையவர்.
எனவே அவருடைய சுவீகார புத்திரர்களாகிய நாம் அவருடைய சுதந்திரர் என்ற உரிமையை சுதந்தரித்துக்
கொள்வோமா...
அன்புத்
தந்தையே... உம்மை நாங்கள் தந்தை என்று அழைக்கும் உரிமையைத் தந்ததற்காக நன்றி கூறுகிறோம்.
எங்கள் வாழ்வில் நாம் உம்முடைய உரிமைக்காரராக வாழும்படிக்கு, தேவ ஆவியானவரின் வழிநடத்தல்
எப்போதும் எங்களுடன் இருக்கும் படியாக ஜெபிக்கிறோம். யேசுவின் நாமத்தினாலே நாம் சோதனைகளையும்
எதிர் கொள்ளும்படியாக எங்களைப் பலப்படுத்தும்படி ஜெபிக்கிறோம்.
ஆமென்
No comments:
Post a Comment