“தீமைக்குத் தீமையையும், உதாசனத்துக்கு உதாசனத்தையும்
சரிக்கட்டாமல், அதற்குப் பதிலாக, நீங்கள் ஆசீர்வாதத்தை
சுதந்தரித்துக் கொள்ளும்படி அழைக்கப் பட்டிருக்கிறவர்கள் என்று அறிந்து, ஆசீர்வதியுங்கள்.”
-1 பேதுரு 3:9
ஒரு
கிறீஸ்தவ வாழ்வின் ஆரம்பமே இது தான். ஒரு கிறீஸ்தவன் தீமைக்குத் தீமை செய்யாமல் விட்டு
விடுவது மட்டுமல்ல, தீமை செய்கிறவர்களைத் தேடிச் சென்று நன்மை செய்ய வேண்டும். எம்மை
உதாசீனப் படுத்துபவரை நாம் உதாசீனப் படுத்தக் கூடாது என்பது மட்டுமல்ல அவரைக் கனப்படுத்த
வேண்டும். ஏனென்றால் நாம் ஆசீர்வாதத்தை சுதந்தரிக்கப் பிறந்தவர்கள். இப்படிச் செய்யும்
போது கர்த்தர் நம்மைக் கனப்படுத்துவார், ஆசீர்வாதங்களினாலே நிரப்புவார்.
இதை
யேசுக் கிறீஸ்து இதை நமக்கு செய்து காட்டினார். தன்னை மறுதலித்து சபித்து சத்தியம்
பண்ணத் தொடங்கிய பேதுருவை பிரதான ஊழியக்காரனாக்கினார். அவரை அடித்து சித்திரவதை செய்து
அவமானப்படுத்தி நிர்வாணமாகத் தொங்க விட்டவர்களுக்காக பிதாவிடம் சிலுவையில் இருந்தபடியே
“இவர்கள் செய்வது இன்னதென்று இவர்களுக்குத் தெரியாது, இவர்களை மன்னியும்” என்று பரிந்து
பேசுகிறார்.
யேசுவிடம்
சென்று ஏழு தடவை மன்னித்தால் போதுமா என்று கேட்டதற்கு ஏழெழுபது தடவை மன்னியுங்கள் என்றார்.
இதன் கருத்து 490 தடவை மன்னியுங்கள் என்பதல்ல.. தொடர்ச்சியாக மன்னியுங்கள் என்பதே.
1பேதுரு
3:9-13 வரையான வசனங்கள் நாம் எப்படி நடக்க வேண்டும்
என்று கூறுகின்றன. பொல்லாப்பான, கபடமான வார்த்தைகளைப் பேசக்கூடாது. தீய காரியங்களை
விட்டு விலகி, நன்மை செய்பவர்களாக, சமாதானத்தைத் தேடுபவர்களாக அதைப் பின்தொடர வேண்டும். நாம் தீமையைப் பின் தொடர்ந்தால், ஒரு வேளை நாம் திரும்பி நடக்கும் போது அது நம்மைப்
பின் தொடரும். எனவே சம்மதானத்தைத் தேடுவோம்.
நாம்
தேவனுடைய பிள்ளைகள் என்றால் அவருக்குரியவற்றை சுதந்தரித்துக் கொள்ளும் சுதந்திரரும்
ஆகிறோம். அவருடனே நாம் மகிமைப்படுவதாயின் அவருடனே சேர்ந்து பாடுபடவும் வேண்டும் என
ரோமர் 8:
17 ம் வசனம் கூறுகிறது. எனவே நாம் வேதம் சொல்வது போல, கர்த்தராகிய
யேசுக் கிறீஸ்து வாழ்ந்து காட்டியது போல வாழும் போது சகலவற்றுக்கும் சுதந்திரராகிறோம். நீதிமான்களின் ஜெபம் கேட்கப் படுகிறது.
ஜெபம்:
அன்பான
ஆவியானவரே, நாங்கள் தேவ பிள்ளைகளாக உம்முடைய வல்லமையை, உம்முடைய ஆசீர்வாதங்களை சுதந்தரித்துக்கொள்ளும்
பொருட்டு நீர் வாழ்ந்து காட்டிய வாழ்வை வாழ வாஞ்சிக்கிறோம். எம் நாவையும், உதடுகளையும்
மாய வசனிப்புகளிருந்து காக்கும்படிக்கும்,
சமாதானத்தைத் தேடும்படிக்கும் எமக்கு வழி காட்டுவீராக. உம் வல்லமையான கரம் எங்களோடு
இருக்கும்படி கிருபை நிறைந்த யேசுக்கிறீஸ்துவின் நாமத்தினாலே ஜெபிக்கிறோம் எங்கள் நல்ல
பிதாவே.
ஆமென்